ஆப்நகரம்

மொத்தம் 127 பேர் போட்டியாம்! மறுபடியும் வாக்குச்சீட்டு முறைதான்

ஆர்கே நகர் தொகுதியில் மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

TNN 24 Mar 2017, 3:40 pm
சென்னை : ஆர்கே நகர் தொகுதியில் மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Samayam Tamil 127 members nominated in rk nagar constituency
மொத்தம் 127 பேர் போட்டியாம்! மறுபடியும் வாக்குச்சீட்டு முறைதான்


ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. இதன் காரணமாக இங்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஒபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், ஜெ அண்ணன் மகள் தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகனாதன், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பாக கங்கை அமரன் உள்ளிட்ட 127 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைப்பெறும் வேட்புமனு பரிசீலனையில் திமுக,தேமுதிக, கமியூனிஸ்ட், நாம்தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம், பாஜக ஆகியோரின் வேட்புமனு பரிசீலனை முடிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பிரிசீலிக்கப்பட்டதில் 64 பேர் களத்தில் உள்ளதால், வாக்குஇயந்திரம் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படியே பயன்படுத்தினால் 4 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக வாக்குசீட்டு முறை இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

127 members nominated in RK Nagar constituency.

அடுத்த செய்தி