ஆப்நகரம்

திருநங்கைகளுக்கு 255 வீடுகள்: அரசாணையை வழங்கிய துணை முதல்வர்!

சென்னையில் கட்டப்பட்டுள்ள 2,048 வீடுகளில் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 255 வீடுகளுக்கான அரசாணையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2019, 2:00 am
சென்னையில் கட்டப்பட்டுள்ள 2,048 வீடுகளில் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 255 வீடுகளுக்கான அரசாணையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கியுள்ளார்.
Samayam Tamil OPS


சென்னை அருகிலுள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதிகளில் அவசர சுனாமி மறுகுடியமர்வு என்ற திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 2,048 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய வீடுகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய குடியிருப்புகளில் 255 வீடுகள் திருநங்கைகளுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட இந்த புதிய வீடுகள் ஓவியம், சமையலறை, கழிப்பறை வசதி ஆகியவற்றுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அரசாணையை 14 திருநங்கைகளுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் வைத்து வழங்கியுள்ளார். அப்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆகியோர் பலரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாணையை பெற்றுக்கொண்ட திருநங்கைகள் அரசு மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி