ஆப்நகரம்

சிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!!

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Oct 2019, 12:44 pm
மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Marudhu


வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு 1801, மே 28ஆம் தேதி மருது பாண்டியர்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதை எதிர்த்து ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். தொடர்ந்து 150 நாட்கள் இடைவிடாமல் போர் நடந்தது. மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் போர் நின்றது.

மருது பாண்டியர்கள் 1801, அக்டோபர் 24 ஆம் தேதி ஆங்கிலேய அரசால் திருப்பத்தூரில் தூக்கிலிட்டப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைசாமியும் மருதுவின் தளபதிகளும் இன்று பினாங்கு என்று அழைக்கப்படும் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

ராதாபுரத்தில், அதிமுக நீடிக்குமா..? சுப்ரீம் கோர்ட் இன்று அறிவிக்கும்!

மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. நடப்பாண்டிலும் வரும் 24ஆம் தேதி அரசு சார்பில் நினைவு தினமும், 27ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் வருவார்கள் என்பதால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புரட்டி எடுத்த பெருமழை; எங்க பாத்தாலும் தண்ணீ- தத்தளிக்கும் சேலம் மக்கள்!

இதைத்தொடர்ந்து 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடக்கிறது. இதனால் இன்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் வரும் 31ம் தேதி வரை 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்டக் கலெக்டர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாம்பன் பாலத்துக்கு புது அப்டேட்!

அடுத்த செய்தி