ஆப்நகரம்

15th Finance Commission: மாநிலங்களுக்கு நிதி பகிர்வதில் சமநிலை தேவை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலங்களுக்கு நிதி பகிர்வதில் மத்திய அரசு சமநிலையை பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Sep 2018, 1:29 pm
மாநிலங்களுக்கு நிதி பகிர்வதில் மத்திய அரசு சமநிலையை பின்பற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil edapadi-palanasami455-15-1494841933
நிதிப்பகிர்வில் சமநிலை கடைப்பிடிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி


தமிழகத்தில் 2020- 2025ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. என்.கே.சிங் தலைமையிலான இந்த 15வது நிதிக்குழு உறுப்பினர்கள் முன்னதாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசினர்.

பிறகு பொருளாதார நிபுணர்களோடு வர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக வெப்பமயமாதல், கடல் அரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நிதிக்குழு தலைவர் என்.கே. சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி, நிதிக்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்தும், அவர்களுடன் இரவு உணவு உண்டார். அதை தொடர்ந்து நேற்று முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களோடு நிதிக்குழு ஆலோசனை நடத்தியது.

அதை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிதி பகிர்வது கடந்த சில காலங்களாக குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு நிதி பகிர்வதில் மத்திய அரசு சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும்.

மாநிலங்களுக்கு நிதியை முறையாக வழங்காததால் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடு வளர்ச்சியடைய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு முறையான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணெக்கெடுப்பின் படி மத்திய அரசின் திட்டங்களில் மானியத்தொகை குறைத்து வழங்கப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ்எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவரக்கூடாது.

சத்துணவு போன்ற திட்டத்தை இலவச திட்டநிதியின் கீழ் கொண்டுவரக்கூடாது. திட்டங்களை முறையாக செயல்படுத்த உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். முன்னதாக நிதிக்குழு குறைத்து வழங்கிய நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 8 கோடி மக்கள் வாழ்கிறார்கள், அவர்களது எதிர்பாப்புகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். இந்நிலையில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் நிதிக்குழு திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி