ஆப்நகரம்

18 எம்.எல்.ஏக்களும் ஆட்சியை கலைக்க சதிப் பண்றாங்க; சபாநாயகர் பதில் மனு!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆட்சியை கலைக்க சதி செய்வதாக சபாநாயகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TNN 4 Oct 2017, 1:12 pm
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆட்சியை கலைக்க சதி செய்வதாக சபாநாயகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 18 disqualified mlas are trying to remove govt
18 எம்.எல்.ஏக்களும் ஆட்சியை கலைக்க சதிப் பண்றாங்க; சபாநாயகர் பதில் மனு!


முதலமைச்சர் எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு எதிராக டிடிவி தினகரன் எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து தலைமைக் கொறடா ராஜேந்திரனின் அறிவுறுத்தலின்படி, 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

இதற்கு எதிராக அவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. அப்போது சபாநாயகர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டிடிவி, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசிய ஆதாரங்களை இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிடிவி தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி வருகிறார்.

18 disqualified MLAs are trying to remove govt.

அடுத்த செய்தி