ஆப்நகரம்

18 எம்.எல்.ஏ.க்களும் விடுதியை விட்டு வெளியேற சபாநாயகா் உத்தரவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களும் அரசு விடுதியை காலி செய்ய வேண்டும் என்று சபாநாயகா் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Samayam Tamil 30 Oct 2018, 12:46 am
18 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகாின் உத்தரவு செல்லுபடியாகும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்கள் அரசு விடுதியை காலி செய்ய வேண்டும் என்று சபாநாயகா் உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil Dhanapal


முதல்வா் பழனிசாமியை மாற்றக் கோாி ஆளுநரிடம் மனு அளித்த அ.தி.மு.க.வைச் சோ்ந்த 18 சட்டமன்ற உறுப்பினா்களை சபாநாயகா் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக 18 சட்டமன்ற உறுப்பினா்களும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

கடந்த 25ம் தேதி சென்னை உயா்நீதிமன்ற 3வது நீதிபதி சத்யநாராயணராவ் வழக்கில் தீா்ப்பு வழங்கினாா். தீா்ப்பில், 18 சட்டமன்ற உறுப்பினா்களையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகும் என்று தொிவிக்கப்பட்டது.

18 சட்டமன்ற உறுப்பினா்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 18 பேரும் அரசு விடுதியை காலி செய்ய வேண்டும் என்று சபாநாயகா் தனபால் உத்தரவிட்டுள்ளாா். மேலும் விடுதியில் நிலுவைத் தொகை இருக்கும் பட்சத்தில் அவற்றை செலுத்திவிட்டு விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி