ஆப்நகரம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஜூலை 23இல் விசாரணை!!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் ஜூலை 23 முதல் 27 வரை விசாரிக்க உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Jul 2018, 6:53 pm
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் ஜூலை 23 முதல் 27 வரை விசாரிக்க உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஜூலை 23இல் விசாரணை!!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஜூலை 23இல் விசாரணை!!


18 எம்எல்ஏ தகுதிநீக்க வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர், கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

மூன்றாவது நீதிபதியாக விமலா பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி சத்தியநாராயணன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை இன்று விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த வழக்கை ஜூலை 23ஆம் தேதிதான் நீதிபதி விசாரிப்பார் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மதியம் இந்த வழக்கின் விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி