ஆப்நகரம்

இலங்கையை ஆட்சி செய்த தமிழ்மன்னன் விக்கிரம ராஜசிங்காவின் 188-வது நினைவு தினம்

வேலூர் பாலாற்றங்கரையில் , இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரம ராஜசிங்காவின் குருபூஜை விழா நடைபெற்றது. மேலும் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செல்லுத்தப்பட்டது.

Samayam Tamil 31 Jan 2019, 1:06 pm
வேலூர் பாலாற்றங்கரையில் , இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரம ராஜசிங்காவின் குருபூஜை விழா நடைபெற்றது. மேலும் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செல்லுத்தப்பட்டது. அவர் சிறைவைக்கப்பட்ட இடத்தை நினைவு சின்னமாக மாற்ற மன்னரின் வாரிசுகள் கோரிக்கை வைத்தனர் .

வேலூர் மாவட்டம்,வேலூர் பாலாற்றங்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் ஸ்ரீ விக்கிரமராஜசிங்காவின் நினைவிடமான முத்து மண்டபம் உள்ளது. இதில் 188 ஆவது நினைவு தினம் குருபூஜை விழாவாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் இலங்கையிலிருந்தும் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ராஜாவின் வாரிசுகளும் புதியபேருந்து நிலையத்திலிருந்து மேளதாளங்கள் முழங்கிட ஊர்வலமாக வந்து விக்கிரம ராஜசிங்காவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த குருபூஜை விழாவில் திரளானோர் கலந்துகொண்டனர் .இதில் கலந்துகொண்ட மன்னரின் வாரிசான அசோக் செய்தியாளர்களிடம் கூறுகையில் ’இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்டு ராஜா குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் பல ஆண்டுகாலம் சிறை வைக்கப்பட்டார். இங்கேயே அவரது குடும்பத்தினர் இறந்தும் போனார்கள். அந்த இடம் தற்போது பயன்படுத்தாமல் மூடிக்கிடப்பதால் அதனை மத்திய மாநில அரசுகள் நினைவிடமாக மாற்றி மக்கள் அங்கு வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதே போன்று விக்கிரம ராஜசிங்காவுக்கு வேலூர் கோட்டையிலும் அவர் பிறந்த மதுரையிலும் மாநில அரசு சிலைவைக்க வேண்டும். அவரது நினைவு தினத்தை அரசு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்

இலங்கையில் 13 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்காவின் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

அடுத்த செய்தி