ஆப்நகரம்

புதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டு விநியோகம்

புதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2018, 4:23 am
புதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil 2 5 lakh smart ration cards issued via online registration
புதிதாக 2.5 லட்சம் ஸ்மார்ட் கார்டு விநியோகம்


தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். ரேஷன் கார்டுகளில் கூடுதலாக தாள் ஒட்டும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், பல ஆண்டுகளாக அந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாகத் தெரியவில்லை. அதற்குள் ஜெயலலிதாவின் அப்போதைய ஆட்சி முடிந்து மீண்டும் ஆட்சி அமைத்து, ஓராண்டு முடிவதற்குள் காலமாகிவிட்டார்.

பின்னர், ஓபிஎஸ் சிறிது காலம் முதல்வராக இருந்து, பின் தற்போதைய முதல்வர் எடப்பாடி முதல்வரானதும் ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் கார்டுகள் கொடுக்கும் பணி அவசர கதியில் நடைபெற்றதில் பலருக்கு நடிகைகளின் புகைப்படங்களுடன் ஸ்மார்ட் கார்டுகள் கிடைத்துள்ளன.

சென்னை தவிர தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த மாதம் அறிவித்தார்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு கோடியே 94 லட்சத்து 78 ஆயிரத்து 82 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக இணையதளம் மூலம் விண்ணப்பித்த 2 லட்சத்து 52 ஆயிரத்து 16 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று உணவுத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி