ஆப்நகரம்

Diwali: தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.

Samayam Tamil 11 Oct 2018, 4:34 pm
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
Samayam Tamil india-transport-labour-strike_d3a46e58-f451-11e7-b42e-2d533d154b0f


இது குறித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.

மேலும், மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் எனக் கூறிய அவர், ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி