ஆப்நகரம்

”நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழர்கள்”: இந்தோனேஷியாவில் நடக்கும் கொடுமை..!

இந்தோனேஷியாவில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் 22 பேர், மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TNN 28 Mar 2017, 12:37 am
இந்தோனேஷியாவில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் 22 பேர், மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil 22 srilankan tamils in danger to exiled from indonesia
”நாடு கடத்தப்படும் அபாயத்தில் ஈழத்தமிழர்கள்”: இந்தோனேஷியாவில் நடக்கும் கொடுமை..!


கடந்த 2012-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு பிறகு, அங்கிருக்கும் பல ஈழத்தமிழர்கள் ஆபத்தான கடற்பயணங்கள் மூலம் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

குறிப்பாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு அகதிகளாக செல்ல பெரும்பாலான ஈழத் தமிழர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த கடற்பயணங்களின் போது படகு விபத்துக்குள்ளாகி, பலர் உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் பயணம் செய்த போது விபத்துக்குள்ளாகி கடலில் தத்தளித்த 44 பேர் இந்தோனேசிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு அந்நாட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் இந்தோனேஷியாவில் அகதிகள் அந்தஸ்து கிடைத்துள்ளது. 17 பேர் மீண்டும் தமிழகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 22 அகதிகளையும் தமிழகத்திற்கு நாடு கடத்த இந்தோனேஷிய அரசு முடிவெடுத்துள்ளது.

ஒருவேளை மீண்டும் தமிழகத்திற்கோ,இலங்கைக்கோ நாடு கடத்தப்பட்டால், பல்வேறு விசாரணைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாவோம் என்பதால் தங்களை நாடு கடத்த வேண்டாம் என அந்த இலங்கை அகதிகள் இந்தோனேஷிய அரசுக்கும், மனித நேய ஆர்வலர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

22 srilankan Tamils in danger to exiled from Indonesia

அடுத்த செய்தி