ஆப்நகரம்

சென்னையில் 3000 மின்கம்பங்கள் சரிவு !

வர்தா புயல் சூறாவளி காரணமாக சென்னையில் 3000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

TOI Contributor 12 Dec 2016, 6:17 pm
சென்னை: வர்தா புயல் சூறாவளி காரணமாக சென்னையில் 3000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
Samayam Tamil 3000 transformers damaged in chennai due to cyclone vardah
சென்னையில் 3000 மின்கம்பங்கள் சரிவு !


சென்னையை கடந்த வர்தா புயலால் அங்கு 192 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. தவிர, 3000 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இவை விரைவாக சரி செய்யப்பட்டு இரவுக்குள் மின்சார வழங்கப்படும் என்று மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் சீர் செய்யப்பட்டு மீண்டும் மின்சார சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி தெரிவித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3,000 மின் ஊழியர்கள் சென்னையில் குவித்து தயாராக வைக்கப்பட்டுள்ளனர். மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி