ஆப்நகரம்

கேரள வெள்ளத்துக்கு 500 கோடி.. சிலைக்கு 3000 கோடியா? பிரகாஷ்ராஜ் கேள்வி!

மூவாயிரம் கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை வைத்த மோடி அரசு, கேரள வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது ஏன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 10 Nov 2018, 10:50 pm
மூவாயிரம் கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை வைத்த மோடி அரசு, கேரள வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது ஏன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil prakash raj


இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், நாடு பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது. இவற்றை ஒருங்கிணைப்பதில் வல்லபாய் படேல் மிக முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கின்றோம்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் 182 மீ உயரத்தில் மத்திய அரசு சிலை அமைத்துள்ளது. உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் படேல் சிலை கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை செலவிட்டு சிலை அமைப்பது, நாட்டின் தற்போதைய சூழலுக்கு அவசியமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்திய அளவில் மட்டுமல்லாமல், பிற நாடுகளில் இருந்தும் எதிர்ப்புகள் வந்துள்ளன.

இந்நிலையில், மூவாயிரம் கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை வைத்த மோடி அரசு, கேரள வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது ஏன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி