ஆப்நகரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான 370 புகார்கள் மீது நடவடிக்கை: தேர்தல் அதிகாரி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

TNN 4 Apr 2017, 12:46 pm
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து புகார்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 370 complaints registered in rk nagar byelection says election officer
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான 370 புகார்கள் மீது நடவடிக்கை: தேர்தல் அதிகாரி


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கான இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவதால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், ஆர்.கே.நகர் இடைதேர்தல் தொடர்பாக நேற்று வரை 370 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வாகன சோதனையில் இதுவரை ரூ.7 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னங்களை பதிவுசெய்யும் பணி நடந்து வருவதாக கூறினார். 256 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி நாளை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தேவையான எண்ணிக்கைகளை விட, அதிகமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளதாகவும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக 94454 77205 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பதிவுகளுக்காக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

370 complaints registered in RK Nagar byElection says Election Officer.

அடுத்த செய்தி