ஆப்நகரம்

பண்ணைக்குட்டையில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலி!!

தமிழகத்தில் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவர்கள் இறப்பது தொடர் கதையாகி வருகிறது.

Samayam Tamil 31 Oct 2019, 5:41 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் இருக்கும் பண்ணைக்குட்டையில் 4 வயது சிறுவன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil thalavadi


கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருச்சியில் இருக்கும் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இவனை மீட்க நடந்த நான்கு போராட்டம் தோல்வியில் முடிந்தது. சிறுவன் இறந்தே மீட்கப்பட்டான்.

இந்த நிலையில் நேற்று கடலூர் அருகே கழிவு நீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் இறந்தார் என்ற செய்தி வெளியானது. இதற்கு முன்னதாக தூத்துக்குடியில் குளியலறையில் வைத்திருந்த தண்ணீர் கேனுகுள் விழுந்த பெண் குழந்தை இறந்தது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விருதுநகர் அருகே மழை நீர் சேமிப்பு குட்டையில் மூழ்கி 3 வயது சிறுவன் ருத்ரன் உயிரிழந்தான்.

கடலூர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!!

இந்த நிலையில், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார். இவர் தனது தோட்டத்தில் 4 அடி ஆழத்தில் பண்ணைக்குட்டை தோண்டி இருந்தார். விவசாய பயன்பாட்டிற்காக இந்தப் பண்ணைக் குட்டையை தோண்டி இருந்தார்.

தமிழகத்தில் மற்றொரு அதிர்ச்சி..! மழை நீர் சேமிப்பு குட்டையில் விழுந்து 3 வயது குழந்தை பலி..

இவரது மகன் 4 வயது மகன் ஹர்சித் தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது பண்ணைக் குட்டையில் தவறி விழுந்தான். சிறுவனைக் காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, பண்ணைக் குட்டையில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மகனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினர். பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனை இறந்தே கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பெற்றோர்களின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைகள் பலியாகி வருவது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

அடுத்த செய்தி