ஆப்நகரம்

காட்டெருமையை வேட்டையாடிய ஐவர் கைது

பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டெருமையை வேட்டையாடிய ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காட்டெருமையின் கறியை கொண்டு செல்ல பயன்படுத்திய ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது.

Samayam Tamil 1 May 2019, 9:25 pm
பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டெருமையை வேட்டையாடிய ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil arrest


பெரியாறு புலிகள் சரணாலத்தில் கடந்தவாரம் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக வனத்துறையினர்க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரேஞ்சர்கள் பிரியாஜோசப், அஜேஷ், ராஜு தலைமையில் வனப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது எருமேலி ரேஞ்சுக்குட்பட்ட கள்ளிப்பாறை மற்றும் சத்திரம் பகுதியில் காட்டெருமையின் எலும்பு, தோல், தலை போன்ற பாகங்கள் கிடப்பதை கண்டனர். விசாரணையில் காட்டெருமையின் கறியை கொண்டு செல்ல பயன்படுத்திய ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது.

நெல்லிமலையைச்சேர்ந்த சஜிதோமஸ்(45), சிஜோ பிலிப்(38) வயநாட்டைச்சேர்ந்த மார்ட்டின்(50) ஆகியோர் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் சஜிதோமஸ், சிஜோ பிலிப் ஆகியோர் வீடுகளில் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது காட்டெருமையை வேட்டையாட உபயோகப்படுத்திய இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மூவரையும் கைது செய்த வனத்துறையினர், இவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட சத்திரம் பகுதியைச்சேர்ந்த இரண்டு ஆதிவாசிகளையும் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி