ஆப்நகரம்

ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை

கிருஷ்ணகிரியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் இரும்பு ஆணியை விழுங்கியதால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 May 2019, 3:50 pm
கிருஷ்ணகிரியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் இரும்பு ஆணியை விழுங்கியதால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை
ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை

ஓசூர் பகுதி அருகேவுள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் விஸ்வநாத், விளையாடிக் கொண்டிருந்த போது அங்கியிருந்த ஆணியை திடீரென விழுங்கிவிட்டான். வயிற்றுக்குள்ள அது சிக்கிக்கொண்டு வலியை ஏற்படுத்த, உடனே சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

அதனை தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரோ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சிறுவன் விழுங்கிய ஆணி அவனது வயிற்றுப் பகுதியில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

சிறுவன் விழுங்கிய ஆணியை வெளியே எடுப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி