ஆப்நகரம்

நாங்குநேரி தொகுதியில் பரபரப்பு.! காங்கிரஸ் நிர்வாகி வீட்டிலிருந்து 50 லட்சம் பறிமுதல்..

நாங்குநேரியில் இடை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 17 Oct 2019, 7:54 pm
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவும் தொகுதிகளை கைப்பற்ற களத்தில் இறங்கி பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. இத்துடன் நாம் தமிழர் கட்சியும் தொகுதி மக்களை ஈர்த்து வருகிறது.
Samayam Tamil 4


முதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வேண்டும்: பா.ம.க. ராமதாஸ் அறிக்கை!!

இந்நிலையில் நாங்குநேரி சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் ஆவணம் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் போட்டியிடவுள்ளார்.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என நெல்லை ஆட்சியர் ஷில்பா மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோரின் தலைமையில் அறிக்கை வெளியிடப்பட்டது.

தீபாவளிக்கு தயாராகிய பட்டாசு பரிசு பெட்டிகள்..! துணி வாங்கும்போது மறந்துடாதீங்க..

அந்த அறிக்கையில் மோசமான நோயினால் அவதிப்பட்ட நபர்களுக்கு பணம் அல்லது மருத்துவ வசதிகள் வழங்குவதற்கு உரிய அனுமதியுடன் நடவடிக்கை தொடரலாம் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளது. இப்படி கடுமையான விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தும் இந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் இருந்து லட்ச கணக்கில் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டுக்குத் தேவை கம்யூனிஸ்ட் கொள்கைகள்: 98 வயதில் சங்கரய்யா அழைப்பு!!

பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட இருந்ததா என்பதை குறித்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர். தேர்தல் நடக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி