ஆப்நகரம்

கதிராமங்கலத்தில் மக்களை சந்திக்க சென்ற மதிமுகவினர் 50 பேர் கைது

கதிராமங்கலம் கிராமத்தில் மக்களை சந்திக்க சென்ற மதிமுகவினர் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNN 2 Jul 2017, 5:28 pm
கும்பகோணம் : கதிராமங்கலம் கிராமத்தில் மக்களை சந்திக்க சென்ற மதிமுகவினர் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 50 mdmk cadres arrested by in police kathiramangalam
கதிராமங்கலத்தில் மக்களை சந்திக்க சென்ற மதிமுகவினர் 50 பேர் கைது


தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முந்தினம் திடீரென்று எண்ணெய் குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டது.

.இதனையடுத்து கதிராமங்கலம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அப்பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் அரசியல் கட்சிகளும் , சமூக ஆர்வலகள், இளைஞ்சர்கள் கதிராமங்கலம் நோக்கி படையெடுத்து வருகிறனர். இதனிடையே இன்று மதிமுக மதிமுக விவசாய அணிச்செயலர் முருகன் உட்பட 50 பேர் கதிராமங்கலம் கிராமத்தில் நுழைய முயற்சி செய்தனர் . இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 50 பேரையும் கைட்யு செய்தனர்.

அடுத்த செய்தி