ஆப்நகரம்

விஷம் கலந்த தண்ணீரை அருந்திய 60 வெள்ளாடுகள் பரிதாப பலி!

வாணியம்பாடி அருகே வனபகுதியில் விஷம் கலந்த தண்ணீரை அருந்திய 60 வெள்ளாடுகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 10:05 am
வாணியம்பாடி அருகே வனபகுதியில் விஷம் கலந்த தண்ணீரை அருந்திய 60 வெள்ளாடுகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil விஷம் கலந்த தண்ணீரை அருந்திய 60 வெள்ளாடுகள் பரிதாப பலி!
விஷம் கலந்த தண்ணீரை அருந்திய 60 வெள்ளாடுகள் பரிதாப பலி!


வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள உமையப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவருக்கு சொந்தமான ஆடுகளை ஆர்.எம்.எஸ் புதூர் காட்டுபகுதியில் மேய்ச்சலூக்காக விட்டிருந்தார். அப்போது வன விலங்களுக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் உள்ள நீரை ஆடுகள் குடித்தன.

குடித்த சிறிது நேரத்தில் காட்டு பகுதியில் ஆங்காங்கே 60 ஆடுகளும் சுருண்டு விழுந்து உயரிழந்தன. மேய்ச்சலுக்காக சென்றவர்களும், காட்டுபகுதியில் இருந்தவர்களும் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஆலங்காயம் வனத்துறையினருகுக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் கால்நடைதுறை அதிகாரிகள் நேரில் சென்ற பார்த்த போது தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. ஓரே இடத்தில் 60 ஆடுகள் இறந்ததை அறிந்த கிராமத்தினர் வனபகுதியில் குவிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீஸார் மற்றும் ஆலங்காயம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி