ஆப்நகரம்

ஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Samayam Tamil 29 Jan 2019, 1:13 pm
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil jacttogeo_protest


2003ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் ஊழியர் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று ரிமாண்டில் வைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 400க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 600க்கும் மேற்பட்டோரை சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அரசு எதிர்த்து வருகிறது. தேர்தல் நேரத்தில் சம்பள உயர்வுக்காக இவ்வாறு திட்டமிட்டு போராடுவது ஆசிரியர் சங்கங்களுக்கு வழக்கமாகிவிட்டது என குற்றம்சாட்டப்படுகிறது.

அது தவிர மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு வரவுள்ள சமயத்தில் இவ்வாறு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தாமல் மாணவர் நலன் கருதி பணிக்குத் திரும்பவேண்டும் என முன்னதாக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை போராட்ட குழு கேட்கவில்லை. எனவே இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி