ஆப்நகரம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் .

Samayam Tamil 23 Sep 2018, 12:39 pm
தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர் அருணா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!
தமிழகத்தில் ஆண்டுதோறும் புதிதாக 6,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!


புற்றுநோயில் இருந்து குணமடைந்த குழந்தைகளை உற்சாகமூட்டும் விதமாக, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று ‘ரோஸ் தினம்’ கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயில் இருந்து குணமடைந்த சுமார் 150 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் ரத்தநோய் துறை உதவி மருத்துவர் அருணா ராஜேந்திரன் கூறுகையில்: நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளில் 70 பேர் குணமடைகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் ரத்தப் புற்றுநோயால் தான் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவாகும் அனைத்து சிகிச்சைகளும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

காய்ச்சல், விடாத காய்ச்சல், கால் வலி, முட்டி வலி, ரத்த சோகை, நெறி கட்டுதல் போன்றவை ரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள். எனவே இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும். தமிழகத்தில் ஆண்டு தோறும் புதிதாக 6,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர் அருணா ராஜேந்திரன் கூறினார்.

அடுத்த செய்தி