ஆப்நகரம்

கல்லணையில் இருந்து வினாடிக்கு 65, 398 கனஅடி நீர் வெளியேற்றம்!

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 398 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Aug 2018, 12:54 pm
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 398 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kallanai-dam-trichy
கல்லணையில் இருந்து வினாடிக்கு 65, 398 கனஅடி நீர் வெளியேற்றம்!

கல்லணையில் இருந்து தொடர்ந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் அதிக அளவிலான தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 9,001 கனஅடியும், வெண்ணாறில் 10 ஆயிரத்து 6 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. இதேபோல் கல்லணை கால்வாயில் வினாடிக்கு 3 ஆயிரத்து 221 கனஅடி நீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 43 ஆயிரத்து 170 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தமாக கல்லணையில் இருந்து 65 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் காவிரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கடைமடை வரை சென்று பாசனத்திற்கு பயன்படும் வகையில் கல்லணை கால்வாயில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 221 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி