ஆப்நகரம்

டிடிவி தினகரனிடம் 7 மணிநேரம் விசாரணை

லஞ்சப் புகாரில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரிடம் ஆஜராகிய டிடிவி தினகரனிடம் சுமார் 7 மணிநேரம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 23 Apr 2017, 3:18 am
டெல்லி: லஞ்சப் புகாரில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரிடம் ஆஜராகிய டிடிவி தினகரனிடம் சுமார் 7 மணிநேரம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil 7 hours probe against ttv dhinakaran
டிடிவி தினகரனிடம் 7 மணிநேரம் விசாரணை


அதிமுக கட்சி மற்றும் இரட்டை இல்லை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் ரூ.1.30 கோடி ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல்செய்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

விசாரணையின் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் அளித்துள்ள சம்மனின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் தினகரன் நேற்று நேரில் ஆஜராகிய டிடிவி தினகரனிடம் சுமார் 7 மணிநேரம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7 Hours probe against TTv Dhinakaran

அடுத்த செய்தி