ஆப்நகரம்

நிரப்பப்பட்டன 785 வனகாவலர்கள் பணியிடங்கள்

26, 345 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காட்டுப்பகுதி உள்ளது. இதனைப் பாதுகாக்க வனத்துறை அதிகாரிகளுக்கு 785 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

Samayam Tamil 5 Mar 2019, 6:39 am
26, 345 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காட்டுப்பகுதி உள்ளது. இதனைப் பாதுகாக்க வனத்துறை அதிகாரிகளுக்கு 785 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்கு பொறியியல் பயின்ற 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இத்துறையில் முதன்முறையாக ஆன்லைன் தேர்வு நடைபெற்றது.
Samayam Tamil forest


இந்தப் பணிக்கு துடிப்பு மிக்க இளைஞர்கள் தேவைப் படுகின்றனர். காடுகளில் சட்ட விரோதமாகக் கடத்தப்படும் அரிய வகை மரங்கள் மற்றும் பொருட்களைத் தடுப்பதில் இந்த துறை அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் திடீரெனப் பற்றும் காட்டுத் தீயை அணைக்க இவர்கள் உதவுகின்றனர். சமீபத்தில் சின்னத்தம்பி யானை ஊருக்குள் புகுந்தது. அதுபோல ஏற்பட்டால் அவற்றைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

பேப்பர் தயாரிக்க அதிகமாக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனைத் தடுக்க இந்த துறை தீவிர முயற்சி எடுத்து வருவதால் இத்துறை பசுமைத் துறை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த துறை பேப்பர் பயன்பாட்டைத் தவிர்க்க விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே வழங்கியது. இதன்மூலம் கிட்டத்தட்ட 3 கோடி ஏ 4 ஷீட்கள் தேவைப்படவில்லை.

அடுத்த செய்தி