ஆப்நகரம்

துறையூர் மினிலாரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

திருச்சி அருகே மினிலாரி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2019, 3:52 pm
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி லாரி, கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.
Samayam Tamil துறையூர் மினிலாரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
துறையூர் மினிலாரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!


திருச்சி மாவட்டம் முசிறி பேரூரை சேர்ந்த கிராமத்தினர், எரகுடி அடுத்த எஸ்என் புதூரில் உள்ள அங்காயி அம்மன் பிடாரி கோயிலுக்கு கிடாவெட்டி நேர்த்தி கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தனர். இதற்காக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 22 பேர் மினி லாரியில் நேற்று எஸ்என்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருமானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, மினி லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்து தறிகெட்டு ஓடி, சாலையோரம் இருந்த 100 அடி ஆழ கிணற்றின் உள்ளே விழுந்தது.

ஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது!

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக, போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கிணற்றில் விழுந்தவர்களை கயிறுமூலம் கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், மினி லாரியில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்!

இதனிடையே, விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்த மாருதி சுஸுகி..!

அடுத்த செய்தி