ஆப்நகரம்

சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனாவுக்கு பலி..!

தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 May 2021, 4:59 pm
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்தவர் மருத்துவர் கார்த்தி. இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவருக்கும் கார்த்திகா (29) என்ற பெண் மருத்துவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்துள்ளது.
Samayam Tamil மருத்துவர் கார்த்திகா


இந்நிலையில் கார்த்திகா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். மேலும், கர்ப்ப காலத்தில் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கார்த்திகா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.

ஆனால், சென்னையில் எங்கும் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காத நிலையில் கடைசியில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திகா இன்று அதிகாலை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

''ஒரு வாரத்தில் பரவ வேண்டியது ஒரே நாளில் பரவிவிட்டது'' ஊரடங்கா இது?

அதனால் கார்த்திகாவின் குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அண்மையில் மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவர் சண்முகப்ரியா அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கொரோனா காலத்திலும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்த செய்தி