ஆப்நகரம்

9 சவரன் நகையை ஆட்டய போடாமல் போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பரிசு

சாலையில் பெண் ஒருவர் தவறவிட்ட 9 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்துள்ளார் சிஆர்பிஎப் வீரரின் மனைவி.

TNN 6 Jul 2017, 2:15 pm
சாலையில் பெண் ஒருவர் தவறவிட்ட 9 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்துள்ளார் சிஆர்பிஎப் வீரரின் மனைவி.
Samayam Tamil 9 sovereign gold jewelry caught by a woman and handed over to the police
9 சவரன் நகையை ஆட்டய போடாமல் போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பரிசு


திருவொற்றியூர் சாத்தாங்காட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அண்ணாமலை (50). இவரது மனைவி சந்திரா (45). கடந்த மாதம் 22ம் தேதி அண்ணாமலை மற்றும் சந்திரா இருவரும் புதுவண்ணாரப்பேட்டையில் தனியார் நிறுவன சார்பில் நடந்த ஒரு கூட்டத்துக்கு சென்றனர். அப்போது சந்திரா, தன்னுடைய செயின், மோதிரம் உள்பட 9 சவரன் தங்க நகைகளை ஒரு பர்சில் எடுத்துக் கொண்டு அந்த கூட்டத்திற்கு சென்றுள்ளார். கூட்டம் முடிந்து வீடு திரும்பும்போது பர்ஸ் தொலைந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை துறைமுக பகுதியைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் விஜயராகவன். இவரது மனைவி ஷீலா (35). இவர் சந்திரா தவறவிட்ட பர்சை கண்டு அதனை எடுத்துள்ளார். அதில், தங்க நகைகள் இருப்பதைக் கண்டு புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அப்போது பர்ஸிலிருந்த காகிதங்களைக் கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அது சந்திரா என்பவரின் பர்ஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை வரவழைத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு, பின்னர் நகை அவருடையது தான் என்பது உறுதி செய்யப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் சாலையில் கிடந்த பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த ஷீலாவை காவல் நிலையம் வரவழைத்து பாராட்டினர். மேலும் அவருக்கு பரிசும் வழங்கப்பட்டது. நகை கிடைத்த சந்தோஷத்தில் சந்திராவும், ஷீலாவுக்கு பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி