ஆப்நகரம்

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தமிழக ரயில்களில் 90 பெண் கான்ஸ்டபிள்கள் நியமனம்!

தமிழகத்தில் ஓடும் ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மகளிர் பெட்டிகளில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Samayam Tamil 10 Jul 2018, 5:43 am
ஈரோடு: தமிழகத்தில் ஓடும் ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மகளிர் பெட்டிகளில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
Samayam Tamil Railway Police


இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு அரசு ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, பெண் போலீசார் நியமிக்கப்படுவதற்கு முன்பாக, ரயில்களில் ஆண் போலீசாரின் எண்ணிக்கை வலுப்படுத்தப்படும். ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

முன்னதாக ஈரோடு ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எஸ்.ஐ சக்தி கணேஷ் உடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக பெண்கள் பயணிக்கும் மகளிர் பெட்டிகளில் பெண் போலீசார் நியமிக்கப்படுவர்.

இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்படும் என்றார். ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கைகளால், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் திருட்டைக் கட்டுப்படுத்த, ரயில்வே போலீசாருக்கு பயணிகளும் ஒத்துழைப்பும் அவசியம்.

அதேசமயம் தங்கள் விலைமதிப்பற்ற உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

90 women constables to be deployed on trains in TN, says ADGP.

அடுத்த செய்தி