ஆப்நகரம்

கும்பகோணத்தில் வறட்சியால் வருந்தி உயிரைவிட்ட விவசாயி!

கும்பகோணத்தில் வறட்சியால் வருந்தி விவசாயி ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 May 2017, 9:25 pm
கும்பகோணத்தில் வறட்சியால் வருந்தி விவசாயி ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a farmer in kumbakonam dies in drought shock
கும்பகோணத்தில் வறட்சியால் வருந்தி உயிரைவிட்ட விவசாயி!


அலமன்குறிச்சியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது விளைநிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் போதிய நீர் இல்லாததால் கருகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து, கடந்த சில நாட்களாக வேதனையில் உழன்றுவந்த தியாகராஜனுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏறபட்டுள்ளது.

சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அவரது மறைவால், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு விவசாயிகளின் வறட்சியை போக்க முன்வரவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக, விவசாயிகள் தற்கொலை செய்வதும், அதிர்ச்சியில் உயிரிழப்பதும் தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kumbakonam: drought hit farmland, farmer dies in shock.

அடுத்த செய்தி