ஆப்நகரம்

தண்ணீரில் மிதந்து சென்ற தமிழகப் பேருந்து!

நேற்று தாக்கிய ஓகி புயலால் கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழகப் பேருந்து ஒன்று தண்ணீரில் மிதந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

TNN 1 Dec 2017, 2:46 pm
சென்னை: நேற்று தாக்கிய ஓகி புயலால் கன்னியாகுமரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழகப் பேருந்து ஒன்று தண்ணீரில் மிதந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil a government bus on its way to tirunelveli from ernakulam in kerala was carried away in water
தண்ணீரில் மிதந்து சென்ற தமிழகப் பேருந்து!


வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ஓகி புயல் தற்போது லட்சத் தீவை நோக்கி நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தால் கன்னியாகுமரியில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்ற தமிழக பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அதில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் வெள்ளத்தில் சிக்கய அந்தப் பேருந்து படகு தண்ணீரில் மிதந்து செல்வது போல் மிதந்து சென்றுள்ளது.

இதை சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி