ஆப்நகரம்

வேலூரில் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்கள்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், பாபு என்ற பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்களே கத்தியால் குத்தி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 5 Feb 2018, 2:25 pm
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், பாபு என்ற பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்களே கத்தியால் குத்தி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil a group of class xi students of ramakrishna aided school in tirupattur stabbed head master babu for questioning them
வேலூரில் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்கள்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியாக பணிபுரிந்து வருபவர் பாபு. இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளி வந்த போது, அங்கிருந்து கோபமாக வந்த சில மாணவர்கள் கத்தியால் பாபுவை குத்தி விட்டு தப்பியோடினர்.

இதையடுத்து இரத்த வெள்ளத்திஙல் துடித்துக் கொண்டிருந்த பாபுவை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு, அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில், பாபுவை கத்தியால் குத்தியவர்கள் பதினென்றாம் வகுப்பு மாணவர்கள் என்பதும், அவர்களிடம் பாபு கேள்வி கேட்டு திட்டியதால் ஆத்திரத்தில் அவ்வாறு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்களே கத்தியால் குத்தி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி