ஆப்நகரம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழ்நாட்டுக்கு மழை எப்படி?

வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2021, 2:48 pm
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், வெப்பச் சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamil nadu rains


ஜூன் 12ஆம் தேதி வெப்பசலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஊரடங்கில் தளர்வு: முதல்வர் அறிவிக்கப்போவது என்னென்ன?

ஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் வெப்பசலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் (கோவை), வால்பாறை பரம்பிக்குளம் ஆழியார் (கோவை) தலா 2, அவிநாசி (திருப்பூர்), சின்னக்கல்லார் (கோவை), சேலம், சோலையாறு (கோவை) தலா1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஓரங்கட்டப்பட்ட ஸ்டாலினின் வலது கரம்: ஆமா அவரு எங்கே?

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக, இன்று முதல் ஜூன் 13ஆம் தேதி வரை தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை முதல் ஜூன் 14ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு? முதல்வர் சொல்லும் ஷாக், அப்புறம் சில சர்ப்ரைஸ்!

இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி