ஆப்நகரம்

நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்

தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Nov 2020, 3:44 pm
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28 இல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தென்தமிழக மாவட்டங்களான மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்


இந்த நிலையில், இன்று மற்றும் நாளை (நவம்பர் 20, 21) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

அதன் தொடர்ச்சியாக, வங்க கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்.

கோவில்பட்டி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி