ஆப்நகரம்

உன் மூஞ்சிய கண்ணாடில பாரு, அந்த பொண்ணு சொன்னது புரியும்..! அப்பா மகனின் சேட்டை.. சிரிப்பு தாங்கல...

டிக் டாக்கில் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடம் காதல் தோல்வி கதையை சொல்ல, அதற்கு அவர் மகனை கேலி, கிண்டலோடு திட்டும் வீடியோ கட்சி வைரலாகி வருகிறது.

Samayam Tamil 3 Dec 2019, 8:52 pm
வியப்பும், விபரீதமும் அடங்கியது டிக் டாக். டிக் டாக் பயனர்கள் அனைவரும் வீடியோக்களை பதிவு செய்வதற்கு மட்டுமே செயலியை பயன்படுத்துவதில்லை. புது, புது ரசனைகளோடு வெளியிடப்படும் வீடியோக்களை கண்டு மகிழவும், நகைச்சுவை நிகழ்வுகளை பார்த்து சிரிக்கவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil உன் மூஞ்சிய கண்ணாடில பாரு, அந்த பொண்ணு சொன்னது புரியும்..!


அது போன்று மகன், தந்தை, அண்ணன், அக்காள் குடும்ப உறவுகளை அதற்கான பாடல், வசனங்கள் ஆகியவற்றை சூழ்நிலைக்கேற்றவாறு நடித்து வீடியோ வெளியிடுவது சினிமாவை மிஞ்சிய பொழுது போக்கை நமக்கு தருகிறது.

இந்த வீடியோவில் தந்தை, மகன் இருவர் நீண்ட நாட்களாகவே வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் போடும் ஒவ்வொரு வீடியோவுக்கும் வியூஸ்கள் குவிந்து விடும்.

அதில் அந்த வாலிபர் எதையாவது தனது அப்பாவிடம் குறுக்கு கேள்விகளை கேட்பார். அதற்கு அவர் தரும் பதில் காட்டமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த வாலிபர் நகைச்சுவாய்க்காகவே தந்து தந்தையிடம் வம்பு இழுப்பது தெரிகிறது.

ஆனால் அவரது தந்தை வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது உண்மையிலேயே கோபமடைகிறாரா என்றுதான் புரியவில்லை.

அடுத்த செய்தி