ஆப்நகரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எஸ்? பினராயி விஜயன் நோ! என்ன சொல்வார் பிரதமர் மோடி?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 5 May 2023, 10:14 am
தமிழ்நாடு தொழில் துறையின்கீழ், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mk stalin modi


வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மே மாத இறுதியில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அபுதாபியில் மே 8 முதல் 10ஆம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பினராயி விஜயனின் மருமகனும், கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான முஹம்மது ரியாஸ், மாநில தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களுக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை மாற்றம்: புதியவர்களுக்கு ஸ்டாலின் கொடுக்கும் கிஃப்ட் - இரண்டு பேருக்கு கல்தா!
இதை முன்னிட்டு அபுதாபி செல்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரடியாக அந்த மனுவை ஆய்வுசெய்தார். பின்னர், `கேரள முதலமைச்சர் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தடை இல்லை' எனக் கூறி பினராயி விஜயனின் அபுதாபி பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்தது.
ஸ்டாலின் டிக் அடித்த அதிகாரி பெயர்: அடுத்த தலைமை செயலாளர் யார்?
இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தை நாடியும் கூட பினராயி விஜயனுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள். பாஜக அரசு எதிர்கட்சி முதலமைச்சர்களின் பயணத்துக்கு உள்நோக்கத்துடன் அனுமதியளிக்க மறுப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற துறை அமைச்சர்கள் வெளிநாடு பயணத்துக்கு திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு பாஜக அரசு அனுமதியளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி