ஆப்நகரம்

மகளை இழந்த சோகத்திலும் 6 பேருக்கு மறுவாழ்வு

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த மகளின் உடல் உறுப்புக்களை தானம் செய்த பெற்றோர்கள், 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

TNN 13 Jun 2016, 12:52 pm
ஈரோடு: ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த மகளின் உடல் உறுப்புக்களை தானம் செய்த பெற்றோர்கள், 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
Samayam Tamil a teen girls organ donated big hearted parents save 6 lives
மகளை இழந்த சோகத்திலும் 6 பேருக்கு மறுவாழ்வு


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மதியழகன்(48), மின் சாதன பொருட்களை விற்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி அமுதா(37) மற்றும் பூமா(17), கார்த்திகா(15) ஆகிய இரு மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கடந்த 9ஆம் தேதி காரில் பெங்களூர் திரும்பிக் கொண்டிருகையில், சித்தோடு தேசிய நெடுஞ்சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மதியழகன் உட்பட 4 பெரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் பூமா மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பூமா 12 வகுப்பு முடித்து பொறியியல் படிப்பில் சேரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மகளை இழந்த துக்கத்திலும் மதியழகன், பூமாவின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வாந்தார். இதனையடுத்து பூமாவின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், தோல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

இதில், 2 சிறுநீரகங்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டன. பூமாவின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளது.

அடுத்த செய்தி