ஆப்நகரம்

காவி உடையில் ஸ்டாலின்: வேற எதும் உள்குத்து இருக்குதா? நெட்டிசன்கள் கலாய்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Aug 2022, 11:19 am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவி டி ஷர்ட், ட்ரவுசருடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil mk stalin


திமுக தலைவரும், முதலைமச்சருமான மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் அவ்வப்போது அறிவுறுத்துவார்.

தனது வீடு அமைந்திருக்கும் சித்தரஞ்சன் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதல்வர் அவ்வப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங்கில் ஈடுபடுவார். அப்போது மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிவார்.

தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கியுள்ள ஸ்டாலின் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்வார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகும்.

ஓபிஎஸ் - சசிகலா கூட்டணி? எடப்பாடியை எதிர்க்க இதுதான் வழி!

கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதல்வர் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நலமடைந்து மீண்டும் துடிப்புடன் தனது பணிகளை இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார். இதனால் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

முதல்வர் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவது வழக்கமானதுதான் என்றாலும் அவர் அணிந்திருந்த காவி டி ஷர்ட், காவி ட்ரவுசர் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காவி உடை அணிந்தது ஏதேனும் குறியீடா என நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆவினில் 15 ரூபாய் யாருக்கு? ஹெச்.ராஜா போடும் புது கணக்கு!
சென்னை ஒலிம்பியாட் நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் நெருக்கம் பாராட்டியது விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியது. இந்நிலையில் காவி உடை அணிந்து முதல்வர் தோன்றிய வீடியோ அந்த விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி