ஆப்நகரம்

கோவையில் பரபரப்பு: மண்ணெண்ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்த பெண்ணிற்கு நடந்தது என்ன.?

கோவை கலெக்டர் அலுவலகத்திற்குள் மண்ணெண்ணெய் கேனுடன் நுழைய முயன்ற 35 வயது தக்க பெண்ணை போலீசார் தடுத்தி நிறுத்தியதால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 30 Sep 2019, 4:53 pm
கோவை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையொட்டி மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் பொதுமக்கள் மனு அளித்து வந்தனர்.
Samayam Tamil 5


பொதுமக்களின் வருகை காரணமாக கலெக்டர் அலுவலகத்தை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மனு அளிக்க வருபவர்களிடம் முழுமையாகச் சோதனை செய்த பின்னரே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த பெண் ஒருவர் துணியால் மண்ணெண்ணெய் கேனை மறைத்து வைத்து உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது அதைச் சோதனை செய்த போலீசார் மண்ணெண்ணெய் கேன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனே அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் விசாரணையில் கோவை அன்னூர் குப்பனூரை சேர்ந்த முருகனின் மனைவி வசந்தா (வயது 35) எனத் தெரிய வந்தது. அப்பெண் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கக்கூடிய விஜயக்குமார் என்பவரிடம் தன்னுடைய 17 பவுன் தங்கச் சங்கிலியை அடகு வைத்துத் தரும்படி கூறியதாகவும். அதன்பின்னர் அதற்கான மொத்த பணமான 2 லட்சத்து 17 ஆயிரத்து செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால் நகையை ஒப்படைக்காமல் இழுத்தடித்த விஜயக்குமார் உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் எனவும் வசந்தாவை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளித்துக் கொள்ள வந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் போலீசார் வசந்தாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி