ஆப்நகரம்

தடையை மீறி படகு சவாரி.! ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.. கடைசியில் நடந்தது.?

ஒகேனக்கல் ஆற்றில் விதிக்கப்பட்ட தடையை மீறி பரிசல் சவாரி செய்த குடும்பம் சுழலில் சிக்கியதையடுத்து, பெண் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Samayam Tamil 11 Sep 2019, 8:10 pm
கர்நாடக மாநில இரு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரினால் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வரும் நீர்வரத்து 70 ஆயரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
Samayam Tamil 8


இந்நிலையில் பாண்டிச்சேரியை சேர்ந்த பேரீஸ் வெளிநாடு வாழ் இந்தியர்களான மனோ, இவரது மனைவி அஞ்சலாட்சி,(51) ஜெஸிகா ,(27) மற்றும் கார் ஓட்டுனர் கந்தன் ஆகிய நான்குபேர் இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டுகளித்த இவர்கள் இன்று அதிகாலை ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இவர்களை ஏமாற்றி காவிரி ஆற்றில் பரிசலில் சவாரி செய்ய, 3 ஆயிரம் ரூபாய் விலை பேசிய ஊட்ட மலையை சேர்ந்த படகோட்டி மனோகரன் (38), அழைத்து சென்றபோது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான முசல் மடுவு எனும் பகுதியில் பரிசல் சுழலில் சிக்கி கவிழ்ந்தது.

இதனால் அஞ்சலாட்சி,(51) ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவருடன் பரிசலில் சென்ற கணவர் மனோ, ஜெஸிகா,(27), கந்தன் ஆகிய 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.

உடனடியாக இதுகுறித்து ஒகேனக்கல் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவயிடத்துக்கு வந்த காவல்துறையினர் நீரில் அடித்துசெல்லப்பட்ட அஞ்சலாட்சியை தேடும்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பணத்திற்காக அவர்களை ஏமாற்றிய பரிசல் ஓட்டி மனோகரனை பிடித்து விசாரித்த ஒகேனக்கல் காவல் துறையினர் அஞ்செட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி