ஆப்நகரம்

மதுரையில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர்!

மதுரையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்து பேருந்து கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2019, 4:04 pm
மதுரையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்து பேருந்து கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil madurai 2


ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து மதுரைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பாண்டி கோவில் பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். அதன் பிறகு அவரிடம் டிக்கெட்டிற்கு நடத்துனர் காசு கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததோடு, நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், அந்த இளைஞரை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கல்லால் பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்ப ஓட முயற்சித்துள்ளார். பேருந்து கண்ணாடி உடைந்ததில் பயணி ஒருவருக்கும், நடத்துனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு, அந்த இளைஞரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால், அப்பகுதியியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி