ஆப்நகரம்

வலியால் துடித்த கர்ப்பிணி: தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்!

சமீபத்தில் பெய்த கனமழையால் பாறைகள் விழுந்து கர்ப்பிணி பெண்ணின் மலை கிராமத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Samayam Tamil 4 Dec 2019, 12:59 pm
ஈரோடு: பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி சுமார் 6 கி.மீ தூரத்துக்கு தூக்கி சென்ற அவலம் ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil தொட்டிலில் தூக்கி செல்லப்பட்ட கர்ப்பிணி
தொட்டிலில் தூக்கி செல்லப்பட்ட கர்ப்பிணி


ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரெனதொட்டிலில் தூக்கி செல்லப்பட்ட கர்ப்பிணிபிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

ஆனால், சமீபத்தில் பெய்த கனமழையால் பாறைகள் விழுந்து வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கர்ப்பிணி குமாரி பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குமாரியின் கணவரும், கிராம மக்களும் மூங்கில் கம்பு மூலம் தொட்டில் கட்டி சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு குமாரியை அழைத்து சென்றுள்ளனர்.

கைக்குழந்தையோடு காதலில் வென்ற இளம்பெண்... துணை நின்ற ஊர்மக்கள்

பின்னர், சாலையில் இருந்த சரக்கு வாகனத்தில் பர்கூர் அரசு மருத்துவமனைக்கு குமாரியை அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குமாரிக்கு பிரசவமாகி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஒவ்வொரு மழை காலத்தின் போதும் தாங்கள் இதுபோன்று அவதிக்கு உள்ளாவதால், தங்களுக்கு முறையான சாலை வசதி செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி