ஆப்நகரம்

ஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Samayam Tamil 19 Aug 2019, 8:15 am
தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது பசும்பால் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப்பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது!
ஆவின் பால் விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது!


தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இதனிடையே, பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்தன. இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

பள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பலி!

இதனை ஏற்று, தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பசும்பால் விலை கொள்முதல் விலை 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டர் விலை 32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எருமைப்பால் விலை கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் விலை 41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, மெஜந்தா நிற கவரில் உள்ள இருநிலை சமன்படுத்திய ஆவின் பால் ஒரு லிட்டர் 34 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. நீல நிற கவரில் உள்ள சமன்படுத்திய பால் ஒரு லிட்டர் 37 ரூபாயில் இருந்து 43 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்த மாருதி சுஸுகி..!

பச்சை நிற கவரில் உள்ள நிலைப்படுத்திய பால் ஒரு லிட்டர் 41 ரூபாயில் இருந்து 47 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆரஞ்சு நிற கவரில் உள்ள நிறை கொழுப்பு பால் ஒரு லிட்டர் 45 ரூபாயில் இருந்து 51 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பால் விலை அதிகமாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதனிடையே பால் விலை உயர்வால், தயிர், மோர், நெய், வெண்ணெய் ஆகிய பொருட்களின் விலையும் உயரும் எனத் தெரிகிறது.

எங்க எம்.பியை காணோம்; கண்டுபிடிச்சு கொடுங்க- நேரா போலீஸில் புகார் அளித்த திருச்சி மக்கள்!

அடுத்த செய்தி