ஆப்நகரம்

நெல்லையில் : இரண்டு ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் 2 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன.இதில் 25 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TNN 16 Oct 2017, 1:38 pm
நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் 2 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன.இதில் 25 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Samayam Tamil accident in tirunelveli 4 way track two omni bus continuous
நெல்லையில் : இரண்டு ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!


சென்னையில் இருந்து பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் நெல்லைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் அந்த பஸ், நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தது.

அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது. ஆம்னி பஸ், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்து நடந்த சிறிது நேரத்துக்குள் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த இன்னொரு தனியார் ஆம்னி பஸ்சும் அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ்கள் ஒரே இடத்தில் கவிழ்ந்ததால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி, தங்களை காப்பாற்றுமாறு மக்கள் கதறினர்.

முதலில் கவிழ்ந்த பஸ்சில் இருந்த 20 பயணிகளும், 2-வது பஸ்சில் இருந்த 5 பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ்கள் நாற்கர சாலையில் கவிழ்ந்ததால் விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident in tirunelveli 4 way track two omni bus continuous

அடுத்த செய்தி