ஆப்நகரம்

ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து

சின்னசேலம் அருகே பயணிகள் ரயில், டிராக்டர் மீது மோதியதில் ரயில் இன்ஜின் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட ரயில் பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்கள்.

TOI Contributor 23 Aug 2017, 8:40 pm
சின்னசேலம் அருகே பயணிகள் ரயில், டிராக்டர் மீது மோதியதில் ரயில் இன்ஜின் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் உள்பட ரயில் பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்கள்.
Samayam Tamil accident when trying to cross the railway gate
ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விபத்து


சேலத்தில் இருந்து சின்னசேலம் வழியாக விருத்தாசலத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றது. இன்று காலை
9.30 மணி அளவில் சேலத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் 11.10 மணிக்கு சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி பகுதியிலுள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கைக் கடக்க முயன்றது.

அப்போது, ரயில் வருவதை கவனிக்காமல் அந்த வழியாக மண் அள்ளிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டா் மீது ரயில் மோதியது. இந்தச் சம்பவத்தில் ரயில் இன்ஜினின் முன்பாகம் அதிக அளவில் சேதமடைந்தது, சுமார் 100 மீட்டர் தூரம் வரை சென்று ரயில் நின்றது.

இந்த விபத்தில் ரயிலை இயக்கிய டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயிலில் பயணித்த பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக இரண்டு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார், துணை வட்டாட்சியர், உள்ளிட்ட ரயில்வே அதிடகாாிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்துவருகிறது.

Accident when trying to cross the railway gate

அடுத்த செய்தி