ஆப்நகரம்

பாலியல் புகாரில் சிக்கிய ஐஜி இடமாற்றம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு, நேர்மையான அதிகாரியை நியமிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 24 Aug 2018, 9:44 pm
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநரை உடனடியாக இடமாற்றம் செய்துவிட்டு, நேர்மையான அதிகாரியை நியமிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil MK Stalin


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் 'ஆமை வேகத்தில்' கூட நகர முடியாமல் தேங்கிக் கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்து புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பரில் ஓய்வு பெற இருக்கும் திருநாவுக்கரசு என்ற கூடுதல் டி.எஸ்.பியை போலீஸ் அகாடமியில் இருந்து, அவசர, அவசரமாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு மாற்றி, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழல்கள்குறித்து விசாரித்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

புகாருக்குள்ளான இணை இயக்குநரின் கீழ் நடைபெறும் இந்த ஊழல் விசாரணைகள் நிச்சயமாக பாரபட்சமற்ற முறையில் சுதந்திரமாக நடைபெறாது என்பதால், அவரை உடனடியாக மாற்றிவிட்டு, நேர்மையான ஒரு ஐஜி-யை இணை இயக்குநராக நியமித்து, இந்த ஊழல் வழக்குகளை எல்லாம் விரைவாகவும் முறையாகவும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Accused vigilance IG should be change says MK Stalin.

அடுத்த செய்தி