ஆப்நகரம்

27 மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை!

நடிகர் கமல் இரண்டாம் நாளாக தந்து நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் அரசியல் பிரவேசம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்

Samayam Tamil 23 Jan 2018, 12:26 pm
நடிகர் கமல் இரண்டாம் நாளாக தந்து நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் அரசியல் பிரவேசம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
Samayam Tamil actor kamal haasan is having a meeting with his fans regarding his political entry
27 மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை!


நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்றும் இரண்டாம் நாளாக 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமல்ஹாசன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்