ஆப்நகரம்

பாஜகவுடன் கைகோர்க்க தயாராகும் கமல்.!

நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

TNN 26 Sep 2017, 9:30 am
நிர்வாக ரீதியாக தமிழகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil actor kamalhassan going to tie up with the bjp
பாஜகவுடன் கைகோர்க்க தயாராகும் கமல்.!


நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். தனது டூவிட்டர் பக்கத்தின் மூலம் தொடர்ந்து அரசியல் அறிவிவிப்புகளை வெளியிட்டு வரும் கமல்ஹாசன், அதிரடியாக அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் மக்களுக்கு செய்வதற்காக தேர்தல் அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிவித்த கமல், என் கட்சியின் நிறம் நிச்சயம் காவியாக இருக்காது என்பதை திடகாத்திரமாக தெரிவித்தார்.

ஆனால் நேற்றைய தனது பேட்டியில் அரசியலில் தீண்டாமை இல்லை என்றும், அதனால் தமிழகத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாகவும் கமல் கூறியுள்ளது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பாரதிய ஜனதா கட்சி, தனது வலதுசாரி கொள்கைகளை ஒதுக்கி விட்டு, குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்குமானால் அக்கட்சியுடன் தொடர்பு வைத்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று அறிவித்துள்ளார். மேலும் தனது கட்சிக்கான சின்னம், கொடி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறிய கமல், இந்தாண்டு இறுதிக்குள் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தேர்தலில் போட்சியிட்டு சட்டரீதியாக பொறுப்பேடுக்கும் பட்சத்தில் தனது நடிப்புத் தொழிலை துறக்கவும் முடிவு செய்துள்ளதாகவும், நிதானமாக யோசித்தே அரசியலுக்கு வரும் முடிவை எடுத்துள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Actor kamalhassan going to tie-up with the BJP

அடுத்த செய்தி