ஆப்நகரம்

போர் என்றால் தேர்தல்: ரஜினிகாந்தின் அரசியல் வியூகம்!

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளாதாக ரசிகர்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்

TNN 26 Dec 2017, 11:17 am
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளாதாக ரசிகர்கள் முன்னிலையில் உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil actor rajinikanth has promised his fans that he will announce his political entry on december 31
போர் என்றால் தேர்தல்: ரஜினிகாந்தின் அரசியல் வியூகம்!


நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை தனது ரசிகா்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பின் இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், இன்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பு தொடங்கியது. இதில் ரஜினியின் முள்ளும் மலரும் படத்தை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் பங்கேற்றார்.
And @superstarrajini arrives. @RajiniFC @rajini_fanclub #RajiniFansMeet #ThalaivarFansMeet pic.twitter.com/F2hvZW1kK3 — priyankathirumurthy (@priyankathiru) December 26, 2017 இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகா் ரஜினிகாந்த்,“நான் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். போர் என்றால் தேர்தல். இப்போது தேர்தல் வந்துவிட்டதா? நான் அரசியலுக்கு புதியவன் அல்ல. 1996 ஆம் ஆண்டிலிருந்தே நான் அரசியலில் உள்ளேன். அரசியலைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.



அரசியலின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால் தான் வரத் தயங்குகிறேன். போருக்கு சென்றால் வெற்றி பெற வேண்டும். அரசியலில் வெற்றி பெற வீரம் மட்டும் வியூகம் வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக நடிகர் ரஜினி தனது ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

அடுத்த செய்தி