ஆப்நகரம்

ரஜினிகாந்த் அதிமுகவிற்கு வரவேண்டும் – அமைச்சா் ஜெயக்குமாா் அழைப்பு

நடிகா் ரஜினிகாந்த் ஒன்றும் எங்களுக்க வேண்டாத மனிதா் கிடையாது. அவா் அதிமுகவிற்கு வரவேண்டும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

Samayam Tamil 17 May 2019, 12:25 am
எம்ஜிஆரின் படங்களிலும், அரசியலிலும் கண்ணியம் கோட்பாடு இருந்தது. கமல் ஹாசனைப் பொருத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை அரசியலும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமா்சனம் செய்துள்ளாா்.
Samayam Tamil Jayakumar 123


மதுரை தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''திமுக கூட்டணி என்பது காகித ஓடு. வருகிற 23ம் தேதி காங்கிரஸ், திமுக, அமமுக காகித ஓட நிலைமைக்கு வரும். அதிமுகவிற்கு ரஜினிகாந்த் வர வேண்டும். அவர் ஒன்றும் வேண்டாத மனிதர் அல்ல.

ஸ்டாலின் ஒரு கணக்கு வாத்தியாராக மாறியுள்ளார். ஸ்டாலின்க்கு கழித்தல் தெரியாது. வரும் 23ஆம் தேதிக்கு பின்பு அவர் கழித்தல் கணக்கில் சேர்க்கப்படுவார்.

தமிழிசை சரியான பதிலை தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் நிரூபிக்கத் தயாரா என்றுதான் கேட்டுள்ளாரே தவிர,நான் பேசவில்லை என்று அவர் கூறவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. திமுகவிற்கு கொள்கை லட்சியம், தொலைநோக்குப் பார்வை என்று எதுவும் இல்லை. அதிகாரப் பசி மட்டும்தான் உள்ளது.

அதிமுக அரசை கவிழ்க்க திமுக வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால் தினகரன் நினைப்பது பச்சை துரோகம். இதையெல்லாம் விட முக்கியமாக யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாத மாபெரும் இயக்கம். அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாக தான் உள்ளனர்.

3 சட்டமன்ற உறுப்பினர்கள் நிலை என்பது இடைக்கால தடையாக இருக்கலாம். வெற்றி எங்கள் பக்கம் தான். தேர்தலுக்குப் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இருக்காது.

அமமுக ஒரு லெட்டர் பேடு கட்சி. உண்மை தொண்டர்கள் அமமுக வில் இருந்து மீண்டும் அதிமுகவிற்கு திரும்புவார்கள். வாக்கு சேகரிப்பதற்காக திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் செல்லும் தினகரன் வெற்றி பெற்ற பின்னர் ஆர்கேநகர் தொகுதிக்குசென்றதுண்டா? சட்டமன்ற அலுவலகத்திற்குக் கூட தினகரன் செல்லவில்லை. ஜாதி, மத ரீதியாக கமலஹாசன் தமிழகத்திற்கு குந்தகம் விளைவித்து, ஆதாயம் தேட நினைத்தால் சட்டத்திற்கு முன் அவர் நிற்க வேண்டியது வரும்.

7 தமிழரின் விடுதலை குறித்து மாநிலம் முடிவு செய்ய வேண்டியநிலைக்கு வந்தபோது, ஞாயிற்றுக்கிழமை கூட அமைச்சரவைக் கூட்டம் கூட்டி உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்துவருகிறோம் இந்த விஷயத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்றார்.

அடுத்த செய்தி